தலிபான் ஆதிக்கம் காரணமாக ஆப்கானிஸ்தானில் பாதுகாப்பு நிலை மிகவும் மோசமடைந்த நிலையில், இந்திய தூதரகம் மூடப்பட்டதாக செய்திகள் வெளியாகின.
ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகள் வேகமாக வெளியேறி வரும் நிலையில் அந்நாட்டின் 85 சதவீத பகுதிகள் தங்கள் வசம் வந்ததாக தலிபான்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் பாதுகாப்பு நிலை மோசமடைந்து வரும் நிலையில் கந்தகாரில் உள்ள இந்திய தூதரகம் மூடப்பட்டதாக செய்திகள் வெளியாகின. இந்த செய்தி சரியானது அல்ல. இன்னும் தூதரகம் செயல்பட்டு வருகிறது என தூதரக வட்டார செய்திகள் தெரிவிக்கின்றன.
பாதுகாப்பு காரணமாக சில ஸ்டாஃப்கள் வெளியேறிவிட்டதாகவும், அவசர தேவைக்காக மட்டும் தூதரகம் செயல்பட்டு வருவதாகவும் தகவல் தெரிவிக்கின்றன.

