குப்பை மேட்டில் இருந்து கைக்குண்டு ஒன்று மீட்பு

253 0

மட்டக்களப்பு காத்தான்குடி டீன் வீதியில் குப்பைகள் கொட்டப்படும் பகுதியில் கைவிடப்பட்ட நிலையில் கைக்குண்டு ஒன்றை நேற்று மீட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றினை அடுத்து குறித்த பகுதியில் நேற்று மாலை பொலிஸார் சென்று கைவிடப்பட்ட நிலையிலுள்ள கைக்குண்டை சோதனையிட்ட பின்னர் விசேட அதிரடிப்படையினரின் வெடிபொருட்கள் அகற்றும் பிரிவினர் வரவழைக்கப்பட்டுள்ளனர்.

இந்த குண்டை நீதிமன்ற அனுமதியை பெற்று வெடிக்க வைப்பதற்கான நடவடிக்கையை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.