இந்தோனேசியாவிற்கு விரைவில் 40 லட்சம் தடுப்பூசிகள் அனுப்பி வைக்கப்படும் – அமெரிக்கா உறுதி

254 0

உலகின் 4-வது அதிக மக்கள் தொகையை கொண்ட நாடான இந்தோனேசியாவில், கடந்த 2 வாரங்களாக கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருகிறது.

உலகின் பல்வேறு நாடுகளில் கொரோனா தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில், அமெரிக்காவில் இருந்து 80 லட்சம் தடுப்பூசிகள் பிற நாடுகளுக்கு பகிர்ந்து அளிக்கப்படும் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கடந்த மாதம் அறிவித்தார். வளர்ந்து வரும் நாடுகள் மற்றும் ஏழை நாடுகளில் உள்ள மக்களுக்கும் தடுப்பூசி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்பதற்காக அமெரிக்கா இந்த திட்டத்தை செயல்படுத்த இருப்பதாக அவர் கூறினார்.
மேலும் தடுப்பூசிகள் அதிக அளவில் தயாரிக்கப்படும் நாடுகளில் இருந்து தடுப்பூசிகளை கொள்முதல் செய்து பிற நாடுகளுக்கு பகிர்ந்து அளிப்பதற்காக ‘கோவேக்ஸ்’ என்ற திட்டத்தை உலக சுகாதார நிறுவனம் செயல்படுத்தி வருகிறது. ஆனால் இந்தியாவில் கொரோனா 2-வது அலை பரவல் காரணமாக தடுப்பூசி ஏற்றுமதி நிறுத்தி வைக்கப்பட்டதால், இந்த திட்டத்தின் மூலம் தடுப்பூசிகளை பகிர்வதில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.