மதுபான போத்தல்களுடன் ஒருவர் கைது

337 0

நீர்கொழும்பு – தலுபொத்த பிரதேசத்தில் பெருந்தொகையான மதுபானம் மற்றும் சிகரெட்டுகளுடன் சந்தேகநபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு கைப்பற்றப்பட்ட மதுபானம் மற்றும் சிகரெட்டுகளின் பெறுமதி சுமார் ஒரு கோடி ருபா என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

அதன்போது, சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட ஒரு கோடி ரூபா பெறுமதியான மதுபானம் மற்றும் சிகரெட்டுகளை பதுக்கிவைத்திருந்த நபரொருவர் கைதுசெய்யப்பட்டதுடன், மேலதிக விசாரணைகளுக்காக அவர் நீர்கொழும்பு காவல் நிலையத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

இதுதொடர்பில் நீர்கொழும்பு காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.