உயர் கல்விக்காக வௌிநாடு செல்லும் மாணவர்களுக்கு கொவிட் தடுப்பூசி வேலைத்திட்டத்தின் கீழ் சினோபார்ம் தடுப்பூசியை பெற்றுக் கொடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய குறித்த வேலைத்திட்டம் இன்று முதல் ஆரம்பமாகவுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான மேலதிக விபரங்களை www.army.lk/covid19 என்ற இணைய முகவரிக்கு பிரவேசிப்பதன் மூலம் பெற்றுக் கொள்ளலாம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

