முதல்-அமைச்சர் தனிப்பிரிவு சிறப்பு அதிகாரியாக ஷில்பா பிரபாகர் சதீஷ் நியமனம்

356 0

குறை தீர்ப்புப் பிரிவு, மின் ஆளுமை ஆகியவற்றின் சிறப்பு அதிகாரியாக மறு உத்தரவு வரும்வரை ஷில்பா பிரபாகர் சதீஷ் பதவி வகிப்பார்.

தமிழக தலைமைச் செயலாளர் இறையன்பு வெளியிட்ட அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

உங்கள் தொகுதியில் முதல்-அமைச்சர் துறையின் சிறப்பு அதிகாரி ஷில்பா பிரபாகர் சதீஷ், முதல்-அமைச்சர் தனிப்பிரிவின் சிறப்பு அதிகாரியாக முழு கூடுதல் பொறுப்பு வகிப்பார்.

மேலும், குறை தீர்ப்புப் பிரிவு, மின் ஆளுமை ஆகியவற்றின் சிறப்பு அதிகாரியாகவும் மறு உத்தரவு வரும்வரை ஷில்பா பிரபாகர் சதீஷ் பதவி வகிப்பார்.

செய்தி மற்றும் மக்கள் தொடர்பு இயக்குனர் மற்றும் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறையின் அலுவல் சாரா துணை செயலாளருமான வி.பி.ஜெயசீலன், தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனராக முழு கூடுதல் பொறுப்பு வகிப்பார்.