நாள் ஒன்றுக்கு செலுத்தப்பட்ட அதிகப்படியான தடுப்பூசி டோஸ்கள் நேற்றைய தினம் நாட்டில் பதிவாகி உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன இதனை தெரிவித்துள்ளார்.
அதன்படி, நேற்றைய தினம் (30) 170,995 பேருக்கு சினோபார்ம் தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இவற்றில் 91,759 பேருக்கு சினோபார்ம் தடுப்பூசியின் முதல் டோஸும் 79,236 பேருக்கு சினோபார்ம் தடுப்பூசியின் இரண்டாவது டோஸும் போடப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

