கோவேக்சின் தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களிடம் இருந்து ரத்த சீரம் பெற்று 2 ஆய்வுகள் நடத்தப்பட்டன. அதன் முடிவுகள் இந்த தடுப்பூசி நோய் எதிர்ப்பு பொருளை உருவாக்குகிறது.
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் மற்றும் தேசிய வைராலஜி நிறுவனத்தடன் இணைந்து ஐதராபாத் பாரத் பயோடெக் நிறுவனம் கோவேக்சின் தடுப்பூசியை உருவாக்கியது. இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் இது அவசர கால பயன்பாட்டு அங்கீகாரம் பெற்று பயன்பாட்டில் உள்ளது.


