கல்கிசையில் 15 வயதான சிறுமி ஒருவர், பணத்துக்காக விற்பனை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக, அவரது தாய் உள்ளிட்ட 19 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இணையத்தளம் ஊடாக, குறித்த சிறுமி விளம்பரப்படுத்தப்பட்டு, பலருக்கு விற்பனை செய்யப்பட்டிருப்பதாக, கல்கிசை தலைமையக காவல்நிலையத்துக்கு தெரியவந்திருந்தது.
இதுதொடர்பாக விசேட காவல்துறை குழு ஒன்று விசாரணைகளை ஆரம்பித்தது.
இதன்படி குறித்த சிறுமியை விற்பனை செய்ய முயற்சித்த 54 வயதான ஒருவர் கைது செய்யப்பட்டார்.

