மாகாணங்களுக்கு இடையில் கடுமையாக்கப்படும் கட்டுப்பாடுகள்

235 0

இலங்கையில் மாகாணங்களுக்கு இடையிலான பயணத்தடை கடுமையாக அமுல்படுத்தப்பட்டு வருவதாக பொலிஸார் அறிவித்துள்ளனர்.

மாகாணங்களுக்கு இடையிலான பயணத்தில் தீவிர கவனம் செலுத்தப்படுகிறதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த விடயத்தை இன்றைய தினம் பொலிஸ் ஊடக பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

மாகாண எல்லைகளை கடக்க முயற்சிக்கும் வாகனங்கள் தொடர்ந்தும் திருப்பி அனுப்பப்பட்டு வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், அத்தியாவசிய சேவைகளுக்கான வாகனங்கள் மட்டுமே மாகாணங்களுக்கு இடையில் பயணிக்க அனுமதிக்கப்படுகின்றதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.