சாணக் குழியில் விழுந்து இரண்டரை வயது குழந்தை பலி!

239 0

சாணக் குழி ஒன்றில் விழுந்த இரண்டரை வயதான ஆண் குழந்தையொன்று பலியான சம்பவம் மஸ்கெலியா பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

மஸ்கெலியா – ப்ரவுன்ஸ்வீக் தோட்டத்தின் டனட்டா பிரிவில் நேற்று மாலை இந்த சம்பவம் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று மாலை 5 மணியளவில் குறித்த குழந்தை காணாமல் போயிருந்த நிலையில், அவரை தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.

பின்னர் வீட்டுக்கு அருகில் உள்ள மாட்டுத் தொழுவத்தின் சாணக்குழியில் விழுந்திருந்த நிலையில் குழந்தை மீட்டெடுத்து, வைத்தியசாலைக்குக் கொண்டு சென்றுள்ளனர்.

எனினும் வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லும் வழியிலேயே குழந்தை உயிரிழந்ததாக வைத்தியசாலை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.