தொடருந்து சாரதிகள், கட்டுப்பாட்டாளர்கள் அடையாள வேலைநிறுத்தம்

344 0

தொடருந்து சாரதிகள் மற்றும் கட்டுப்பாட்டாளர்கள் இன்று முற்பகல் முதல் அடையாள தொழிற்சங்க நடவடிக்கையை ஆரம்பிக்கவுள்ளனர்.

இதற்கு 34 தொடருந்து திணைக்கள தொழிற்சங்கங்கள் ஆதரவளிக்கவுள்ளன.

4,400 மில்லியன் ரூபாய் முதலீட்டில், வெளிநாட்டு நிறுவனம் ஒன்றின் ஊடாக இலங்கையில் எண்மான அடிப்படையிலான பயணச்சீட்டு வழங்கும் வேலைத்திட்டம் அமுலாக்கப்படுகிறது.

இதில் இடம்பெறும் மோசடிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த போராட்டம் இடம்பெறவுள்ளது.

இதுதொடர்பாக போக்குவரத்து அமைச்சருடன் பல தடவைகள் பேச்சுவார்த்தை நடத்தியும், எவ்வித தீர்வும் கிடைக்கவில்லை என தெரிவித்து, மேற்படி அடையாள தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாக தொடருந்து திணைக்கள தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.