சுகாதார அமைச்சின் செயலாளர் வெளியிட்டுள்ள சுற்றுநிரூபம் காரணமாக சமூகத்தில் கொரோனாநோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்க கூடிய ஆபத்துள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
கொரோனாவினால் மரணமடைந்தவர்களின் உடல்களை கையளிக்கும் பொறுப்பை கிராமசேவையாளர்களிடமும் மரண விசாரணை அதிகாகளிடமும் சுகாதார அமைச்சின் செயலாளர் வழங்கியுள்ளார் என தெரிவித்துள்ள சுகாதாரபரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல்ரோகண கொரோனாவால் வீட்டில் உயிரிழப்பு இடம்பெற்றால் உடல்களை வழங்கும் விடயத்தில் பொது சுகாதார பரிசோதகர்களின் உதவி தேவையில்லை,என சுகாதார அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
உயிரிழந்தவர்களின் குடும்பத்தவர்கள் உறவினர்களை பிசிஆர் சோதனைக்கு உட்படுத்த தேவையில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்என உபுல்ரோகாண சுட்டிக்காட்டியுள்ளார்.
கொரோனாவால் உயிரிழப்பு இடம்பெறும்போது பொதுசுகாதார பரிசோதகர் அல்லது மருத்துவ அதிகாரி அறிக்கையொன்றை தயாரித்து அவசியமான நடவடிக்கையை எடுப்பதே வழமையான நடவடிக்கை என உபுல் ரோகண தெரிவித்துள்ளார்.
சமீபத்தைய புள்ளிவிபரங்களின் படி வீடுகளில் இடம்பெறும் அனேக மரணங்கள் கொரோனாவால் இடம்பெறுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
சுகாதார அமைச்சின் செயலாளரின் சுற்றுநிரூபத்தினால் கொரோனா நோயாளர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும் ஆபத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

