வெளிநாடுகளுக்கு தொழில் வாய்ப்பு பெற்றுச் சென்ற 142 இலங்கையர்கள் கொவிட்-19 வைரஸால் உயிரிழந்துள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

4800க்கும் அதிகமான இலங்கைத் தொழிலாளர்கள் கொரோனா தொற்றுக்குள்ளாகி உள்ளதுடன் அவர்களில் 4600 பேர் குணமடைந்துள்ளனர் என வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் தலைவர் மங்கள ரந்தெனிய கூறினார்.
மத்தியகிழக்கு உட்பட 16 நாடுகளில் இருந்து இறப்புகளும் தொற்றுகளும் பதிவாகியுள்ளன.
இவர்கள் அனைவரும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் பதிவு செய்து விட்டு தொழிலுக்குச் சென்றவர்கள் என அவர் மேலும் தெரிவித்தார்.

