குற்ற விசாரணைப் பிரிவினரால் கடந்த வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்ட நுகர்வோர் உரிமைகள் செயற்பாட்டாளர் அசேகல சம்பத் விடுதலை செய்யப்பட்டதன் பின்னர் சஜித் பிரேமதாச எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் அவரை சந்தித்து விபரங்களை கேட்டறிந்துள்ளார்.
இதன் போது தான் தவறான விடயங்கள் எவற்றையும் சமூக ஊடகங்களில் பதிவேற்றவில்லை என்றும் , தன்னை அணிந்திருந்த ஆடையுடன் பலவந்தமாகவே கைது செய்து இழுத்துச் சென்றதாகவும் அசேல சம்பத் எதிர்க்கட்சி தலைவரிடம் தெரிவித்தார்.
இதன் போது அசேல சம்பத்துக்கான சட்ட உதவிகளை ஐக்கிய மக்கள் இலவசமாக வழங்கும் என்பதோடு , உண்மைகளை பேசுவதற்கு தயங்க வேண்டாம் என்றும் என்றும் நாம் உங்களுடன் உங்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்துவோம் என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

