பிலியந்தலை, நிவந்திடிய பகுதியில் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறி சூதாட்டத்தில் ஈடுபட்டமைக்காக ஒன்பது பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
29 முதல் 64 வயதுக்குட்பட்ட பிலியந்தலை, மடபாத, பன்னிபிட்டி மற்றும் பொரலஸ்கமுவ பகுதிகளைச் சேர்ந்தவர்களே இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்கள் ஆவர்.
சந்தேக நபர்கள் இன்று கெஸ்பேவ நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

