இந்நிலையில், மாணவர்களும், பெற்றோர்களும் கல்வி தொலைக்காட்சியைப் பார்க்க வலியுறுத்தி தலைமை ஆசிரியர் ஒருவர் தண்டோரா போட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்.
திருச்சி மாவட்டம் உப்பிலியபுரத்தை அடுத்துள்ள வெங்கடாசலபுரம் அரசு உதவி பெறும் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ரவிச்சந்திரன் வீதி, வீதியாக தண்டோரா போட்டு கல்வி தொலைக்காட்சியை பார்க்க வலியுறுத்தியது பொது மக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இதுதொடர்பான காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது

தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு கல்வித் தொலைக்காட்சி மூலம் பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.