குருநாகலில் 4 கைதிகள் தப்பியோட்டம்!

324 0

குருநாகல் நீதிமன்ற வளாகத்தில் உள்ள சிறைக்கூடம் ஒன்றில் இருந்து நான்கு கைதிகள் தப்பிச் சென்றுள்ளனர்.

சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் இதனைத் தெரிவித்துள்ளார்.

தப்பிச் சென்றவர்களில் ஒருவர் மீள கைதுசெய்யப்பட்டுள்ளார்.

ஏனையவர்களை கைதுசெய்ய விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.