யாழ் மத்திய கல்லூரிக்கு நாமல் விஜயம்!

238 0

விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் நாமல் ராஜபக்ஷ இன்றைய தினம் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரிக்கு விஜயம் செய்திருந்தார்.

அத்துடன் கல்லூரியின் நீச்சல் தடாகம், உடல் வலுவூட்டல் நிலையம் மற்றும் விளையாட்டு மைதானம் என்பவற்றை பார்வையிட்டிருந்தார்.

அமைச்சரின் குறித்த விஜயத்தின் போது நாடாளுமன்ற குழுக்களின் பிரதி தவிசாளர் அங்கஜன் இராமநாதன், வடக்கு மாகாண ஆளுநர் மற்றும் இராஜாங்க அமைச்சர்களும் இதில் கலந்து கொண்டிருந்தனர்.