கொரோனா வைரஸ் பரவ ஆரம்பித்த பின்னர் மக்களிற்கு நிவாரணம் வழங்குவதற்காக அரசாங்கம் 260 பில்லியனை செலவுசெய்துள்ளது

157 0

கொரோனாவைரஸ் பரவ ஆரம்பித்த பின்னர் பொதுமக்களிற்கான நிவாரணங்களிற்காக அரசாங்கம் 260 பில்லியனை செலவிட்டுள்ளது என ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச நாட்டிற்கான தனது உரையில் தெரிவித்துள்ளார்.

நாடு முடக்கப்படும் ஒவ்வொரு தடவையும் நாளாந்தம் வருமானம் உழைப்பவர்களிற்கான 5000 நிவாரணமாக 30 பில்லியனை செலவு செய்துள்ளோம் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

பல தடவைகள் அரசாங்கம் இந்த செலவை சுமந்துள்ளது என தெரிவித்துள்ள அவர் கொரோனாவைரஸ் காரணமாக சுகாதார துறைக்காக மேலதிக நிதியை செலவிடவேண்டிய நிலைக்கு அரசாங்கம் தள்ளப்பட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

பிசிஆர் அன்டிஜென் சோதனைகளிற்காக மேலதிக நிதியை செலவிடவேண்டிய நிலையில் அரசாங்கம் உள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.