பசில் ராஜபக்ஷ பாராளுமன்ற உறுப்பினராக விரைவில் பதவியேற்பு!

175 0

பசில் ராஜபக்ஷ தேசிய பட்டியல் எம்.பி.யாக பதவியேற்ற பின்னர் அடுத்த மாதம் பாராளுமன்றத்துக்கு வருவார் என்று அரசியல் வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளதாக டெய்லிமிரர் செய்தி வெளியிட்டுள்ளது.

அமைச்சரவை மறுசீரமைப்பில். நிதி மற்றும் பொருளாதார மேம்பாட்டு அமைச்சராக அவர் பதவியேற்பார் என தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன், பசில் ராஜபக்ஷ ஜூலை 6 ஆம் திகதி எம்.பி.யாக பதவியேற்க வாய்ப்புள்ளதாக அறியமுடிகின்றது.

பசில் ராஜபக்ஷவுக்கு இடமளிப்பதற்காக ரஞ்சித் பண்டாரா எம்.பி. பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.