பசில்ராஜபக்ச எரிபொருள் விலையை குறைக்க முடியாது அவர் ஆலோசனை மாத்திரம் வழங்கலாம் என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
பசில்ராஜபக்ச எரிபொருள் விலை குறித்து தீர்மானிப்பதற்கு நாடாளுமன்ற உறுப்பினரோ அல்லது அமைச்சரோ இல்லை என பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
எரிபொருள் விலை குறித்து தீர்மானிப்பதற்கு ஏனைய அமைச்சர்கள் உள்ளனர் அரசாங்கம் உள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் பெருந்தொற்று நிலைமையில் பொறுப்புணர்வு என்பது அரசாங்கத்தினது கரங்களிலோ அமைச்சர்களின் கரங்களிலோ இல்லை மாத்திரம் இல்லை என தெரிவித்துள்ள அமைச்சர் போக்குவரத்து கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட நிலையில் தங்களின் பாதுகாப்புக்கு பொதுமக்களும் பொறுப்பாளிகள் என தெரிவித்துள்ளார்.
பசில் ராஜபக்ச சிறந்த ஏற்பாட்டாளர் 2005 முதல் அவர் அனைத்து தேர்தல்களிலும் எங்களிற்கு தலைமைத்துவம் வழங்கியுள்ளார் எனவும் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
2005 இல் மகிந்தராஜபக்ச தோற்கடிக்கப்பட்ட பின்னர் கட்சியின் பொறுப்பை பசில் ராஜபக்ச ஏற்றுக்கொண்டார்,அவர் இலங்கைக்கு திரும்பிவந்து அரசாங்கத்தை உருவாக்குவதற்கான வலுவை வழங்கினார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அவர் தனிப்பட்ட காரணங்களிற்காக வெளிநாட்டிலிருந்தார் அவர் இலங்கை வந்துள்ளார் நாங்கள் அது குறித்து மகிழ்ச்சியடைகின்றோம்,ஏனென்றால் சில விடயங்களில் அவர் ஒரு பலம் எனவும் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

