5 மாவட்டங்களைச் சேர்ந்த 10 கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன

176 0

உடன் அமுலுக்கு வரும் வகையில் 5 மாவட்டங்களைச் சேர்ந்த 10 கிராம சேவகர் பிரிவுகள் இன்று காலை முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளராதாக, இராணுவத் தளபதி  அறிவித்துள்ளார்.

இதன்படி பதுளை, களுத்துறை, மன்னார், யாழ்ப்பாணம், இரத்தினபுரி மாவட்டங்களிலேயே 10 கிராம சேவகர் பிரிவுகள் உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, கொழும்பு கிரேன்ட்பாஸ் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட 233 ஆம் தோட்டம் மற்றும் மஹவத்த வீதி ஆகிய பகுதிகள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.