துமிந்த சில்வா விடுதலை – நீதியை மதிக்காத நாட்டில் சூரியன் பிரகாசிக்காது- பாரத பிரேமச்சந்திரவின் மனைவி!

257 0

கொலையாளி விடுவிக்கப்பட்டான், நீதியை மதிக்காத ஒரு நாட்டின் மீது சூரியன் பிரகாசிக்காது என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஷமன் பிரேமசந்திரவின் மனைவி சுமனா பிரேமசந்திர தெரிவித்துள்ளார்.

பாரத பிரேமசந்திர கொலை வழக்கின் குற்றவாளி துமிந்த சில்வா ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் இன்று (வியாழக்கிழமை) விடுதலை செய்யப்பட்டார்.

இந்த நிலையில், இதுகுறித்து சமூக வலைத்தளங்களில் கருத்து வெளியிட்டுள்ள பாரத பிரேமசந்திரவின் மனைவி சுமனா, அரசாங்கத்தின் முடிவுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

உயர் நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்ற நீதிபதிகளின் தீர்ப்புகளை அவமதித்து நீதித்துறையை மதிக்காத ஒரு நாடாக இலங்கை மாறியுள்ளது என்றும் அவர் விமர்சித்துள்ளார்.

இந்த அநீதி போசன் போயாவின் மிக நல்ல நாளில் நடந்தது என்றும் அவர் கூறினார்.