புளுமென்டல் குப்பைமேட்டிலிருந்து உரம் தயாரிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுப்பு!

255 0

கொழும்பு புளுமென்டல் குப்பைமேட்டிலிருந்து உரம் தயாரிப்பதற்கான ஆரம்பக்கட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பிரேம்னாத் சீ.தொலவத்த தெரிவித்துள்ளார்.

குறித்த குப்பைமேட்டிலிருந்து மண் மாதிரிகளை எடுத்து ஆய்வுக்கு உட்படுத்துவதுடன் மக்களுக்குப் பயனளிக்கும் வகையில் உரம் தயாரிக்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேற்படிக் குப்பைமேட்டில் பல ஆண்டுகளாக உக்கிய, உக்காத குப்பைகள் நிறைந்துக் காணப்படுவதால் அவற்றை வேறுப்பிரித்து உரம் தயாரிப்பதற்குப் பயன்படுத்த முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

குறித்த பிரதேசத்தில் வாழும் மக்களின் ஒத்துழைப்புடன் சேதனப் பசளை தயாரிக்கும் திட்டத்தை எதிர்காலத்தில் வெற்றிகரமாக முன்னெடுத்துச் செல்வதற்கு எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.