நாடளாவிய ரீதியில் பயணக்கட்டுப்பாடு மீண்டும் அமுல்படுத்தப்பட்டுள்ளதால் ரயில் சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக ரயில் திணைக்களத்தின் அதிகாரி காமினி செனவிரட்ன தெரிவித்துள்ளார்.
பயணக்கட்டுப்பாடு நீக்கப்பட்டதன் பின்னர் ரயில் சேவை வழமைக்குத் திரும்பும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
பயணக்கட்டுப்பாடு நீக்கப்பட்டதன் பின்னர் மட்டுப்படுத்தப்பட்ட ரயில் சேவையே முன்னெடுக்கப்பட்டதால் பயணிகள் பாரிய சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர் என்றும் எனவே மேலும் பல ரயில்களை சேவையில் ஈடுபடுத்துவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

