இரண்டாவது தடுப்பூசியாக மடர்னாவை செலுத்துக்கொண்டார் அங்கலா மேர்க்கெல்

203 0

அஸ்ட்ராசெனெகா தடுப்பூசியை முதல் டோஸாக பெற்றுகொண்ட ஜேர்மன் அதிபர் அங்கலா மேர்க்கெல் மடர்னா தடுப்பூசியை இரண்டாவது டோஸாக செலுத்தியுள்ளார்.

அமெரிக்காவின் மடர்னா தடுப்பூசி அவருக்கு இரண்டாவது தடுப்பூசியாக செலுத்தப்பட்டது என ஜேர்மன் அதிபர் அலுவலகம் நேற்று செவ்வாய்க்கிழமை உறுதிப்படுத்தியுள்ளது.

ஐரோப்பாவில் பல இரத்த உறைவு தொடர்பான பிரச்சினைகள் அதிகரித்ததை தொடர்ந்து, ஜேர்மனியில் அஸ்ட்ராசெனெகா தடுப்பூசியின் பயன்பாடு நிறுத்தி வைக்கப்பட்டது.

66 வயதான அங்கலா மேர்க்கெல், அஸ்ட்ராசெனெகா தடுப்பூசியை ஏப்ரல் 16 ஆம் திகதி பெற்றுக்கொண்டார்.

அஸ்ட்ராசெனெகாவை முதல் டோஸாக பயன்படுத்திய ஜேர்மனி உட்பட பல நாடுகள், பைசர்-பயோஎன்டெக் அல்லது மடர்னா தடுப்பூசியை இரண்டாவது டோஸாக பய்னபடுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.