காலியில் வீட்டில் மரணித்த ஐந்து கொவிட் நோயாளர்கள்

318 0

காலிப் பிரதேசத்தில் வீடுகளில் உயிரிழந்த ஐவர் மீது மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் சோதனைகளில் அவர்கள் கொரோனா தொற்றாலேயே உயிரிழந்துள்ளதாக கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையின் சட்ட மருத்துவ அதிகாரி அலுவலகம் உறுதிப்படுத்தியுள்ளது.

உயிரிழந்தவர்களில் யக்கலமுல்ல கல்பொட்டவத்தயைச் சேர்ந்த 99 வயதான ஆண், திவெல்வத்த அக்மீமனையைச் சேர்ந்த 7 பிள்ளைகளின் தாயார் (98 வயது), பூஸா கதுருபேயைச் சேர்ந்த 4 பிள்ளைகளின் தாயார், கிரிம்புர பாசல் மாவத்தையைச் சேர்ந்த 78 வயது பெண் மற்றும் பத்தேகம தெற்கைச் சேர்ந்த 72 வயதானவர் ஆகியோரே அடங்குகின்றனர்.

ஐவரும் வீட்டிலேயே மரணித்த நிலையில் அவர்களது சடலங்கள் காலி கராப்பிட்டிய வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டு பிசிஆர் சோதனை மேற்கொள்ளப்பட்டதில் கொவிட் பாதிப்பு உறுதியாகியுள்ளது.

பலியான ஐவரின் பிரேதப் பரிசோதனைகள் கராப்பிட்டி வைத்தியசாலையில் நேற்று மேற்கொள்ளப்பட்டன. இவர்களில் நால்வர் நாள்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டவர்களாவர்.
இதேவேளை பத்தேகம தெற்கு பகுதியில் உயிரிழந்த பெண்ணின் மருமகளும் கொவிட் வைரஸால் ஏற்பட்ட நிமோனியாவால் இறந்துள்ளார்.