முல்லைத்தீவு – கொக்கிளாய் கிழக்கில் கனியமணல் (இல்மனைட் ) தொழிற்சாலை ஒன்றினை நிறுவுவதற்காக, தமிழ் மக்களுக்குச் சொந்தமான சுமார் 44ஏக்கர் காணிகளை அரசவளங்கள் மற்றும் தொழில் முயற்சி அமைச்சின் கீழான, இலங்கை கனிப்பொருள் மணல் கூட்டுத்தாபனம் கம்பிகளாலான வேலிஅமைத்து ஆக்கிரமித்துள்ளது.
இவ்வாறு இலங்கை கனிப்பொருள் மணல் கூட்டுத்தாபனத்தினால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தமிழ் மக்களுக்குச் சொந்தமான காணிகள் உடனடியாக விடுவிக்கப்படவேண்டுமென முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் மதிப்புறு துரைராசா ரவிகரன் அவர்கள் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு இலங்கை கனிப்பொருள் மணல் கூட்டுத்தாபனத்தினால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள காணிகள் தொடர்பில், முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் அவர்கள் மற்றும், கரைதுறைப்பற்று பிரதேசசபை உறுப்பினர் சின்னராசா லோகேஸ்வரன் ஆகியோர் 22.06.2021 இன்றையதினம் கொக்கிளாய்ப் பகுதிக்கு நேரில் சென்று ஆராய்ந்தனர்.
இதன்பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே ரவிகரன் அவர்கள் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

