குப்புற கவிழ்ந்து கிடந்த ஆணின் சடலம் மீட்பு

653 0

சம்மாந்துறை, பொலிஸ் பிரிவுக்குட்பட்ட   நிந்தவூர் பிரதேச சபைக்கு பின்னாலுள்ள செட்டியாவெட்டை வயல் வெளியில், இறந்த நிலையில் ஒருவரின் சடலம், திங்கட்கிழமை மாலை மீட்கப்பட்டுள்ளது.

நிந்தவூர் பிரதேசத்தைச் சேர்ந்த உபாலியென அறியப்படும் மாட்டிறைச்சி சார்கூலி தொழில் செய்யும் ஜாபீர் (வயது 60) என்பவர் இவ்வாறு உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டவராவார்.

இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.