உடன் அமுலுக்கு வரும் வகையில் சில பகுதிகள் தனிமைப்படுத்தல்

298 0
இன்று (22) காலை 6 மணி முதல் 2 மாவட்டங்களில் உள்ள சில கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக,  இராணுவத் தளபதி அறிவித்துள்ளார்.

இதன்படி இரத்தினபுரி மாவட்டத்தில் கொட்டாவல கிராம சேவகர் பிரிவு மற்றும் கொழும்பு மாவட்டத்தில் கொலன்னாவ ஸ்ரீ ஆனந்தராம வீதி ஆகியவை தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கம்பஹா மாவட்டத்தில் உள்ள மஹபாகே பொலிஸ் பிரிவில் உள்ள கெரங்கபொகுனா ஜோர்ஜ் வீதி இன்று காலை 6 மணி முதல் தனிமைப்படுத்தலில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாகவும் இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா அறிவித்துள்ளார்.