மக்கள் பொறுப்பின்றி நடந்துகொண்டால் இந்தியாவை போன்ற பேரழிவு உருவாகும்-இராணுவத்தளபதி

213 0

மருத்துவர்கள் மற்றும் சுகாதார நிபுணர்களின் வேண்டுகோளின்படி டெலட்டா வைரஸ் தொற்று காரணமாக நாட்டை தொடர்ந்தும் முடக்கி வைத்திருக்க முடியாது.

நாடு தழுவிய பயணத்தடை இன்று தளர்த்தப்பட்டாலும் மக்கள் பொறுப்பின்றி நடந்துகொண்டால் இந்தியாவின் நிலையே இங்கும் உருவாகும். மேற்கண்டவாறு தேசிய கொவிட் தடுப்பு செயலணியின் தலைவரும், இராணுவ தளபதியுமான கூறியிருக்கின்றார். இது குறித்து மேலும் அவர் கூறியுள்ளதாவது,

இந்தியாவில் திரிபுபட்ட டெல்ட்டா வைரஸின் தாக்கம் எவ்வாறானது என்பதை நாங்கள் தினசரி அறிகிறோம். எனவே சுகாதார நடைமுறைகள் என்பது மிக முக்கியமானது. திரிபபட்ட டெல்ட்டா வகை வைரஸ் கொழும்பு – தெமட்டகொட பகுதியில் அடையாளம் காணப்பட்டிருக்கின்றது. அதனை கட்டுப்படுத்த நாம் நடவடிக்கை எடுத்துள்ளோம்.

அதேசமயம் அந்த வைரஸ் நாடு முழுவதும் பரவினால் பேரழிவு என்பதை நாம் ஒத்துக் கோள்கிறோம் ஆனால் மக்கள் பொறுப்புணர்வுடன் நடந்தால் பேரழிவை தவிர்க்கலாம். அதுவே இப்போதுள்ள வழி முழு நாட்டையும் தொடர்ந்தும் முடக்கி வைத்திருப்பது சாத்தியமற்றது. அன்றாடம் உழைத்து உண்ணும் மக்களை பட்டினியால் சாக விட முடியாது எனவும் இராணுவ தளபதி கூறியிருக்கின்றார்.