தமிழகத்துக்கு இதுவரை 1 கோடியே 26 லட்சத்து 8 ஆயிரத்து 220 தடுப்பூசிகள் வந்துள்ளன. அதில் 1 கோடியே 18 லட்சத்து 24 ஆயிரம் பேருக்கு போடப்பட்டுள்ளது.சென்னை பெருங்குடியில் உள்ள நகர்புற சமுதாய நல மருத்துவமனையில் தொழு நோயால் பாதிக்கப்பட்டோருக்கான கொரோனா தடுப்பூசிமுகாமினை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று தொடங்கி வைத்தார். பின்னர், கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களுக்கு அரிசி, பருப்பு, காய்கறி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களும் வழங்கப்பட்டது.
பின்னர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:-
தமிழகத்தில் தொழுநோயால் பாதிக்கப்பட்டுள்ள 11 ஆயிரத்து 490 பேர் பயன்பெறும் வகையில் சிறப்பு தடுப்பூசி முகாம் தொடங்கப்பட்டது. இதன் மூலம் இந்த பகுதியில் வசிப்போருக்கு இன்று (நேற்று) முதல் தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கியுள்ளன. இதனை தொடர்ந்து தமிழகம் முழுவதும் உள்ள தொழு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் முழுமையாக கண்டறியப்பட்டு அவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும்.
இதையும் படியுங்கள்…. தமிழகத்தில் 386 பேருக்கு டெல்டா வகை கொரோனா- ஆய்வில் அதிர்ச்சி தகவல்

