கடந்த 24 மணித்தியாலங்களில் இடம்பெற்ற விபத்துக்களில் நால்வர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வெலம்பொட பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வீதியில் பயணித்த 80 வயதுடைய ஒருவர் மீது கார் ஒன்று மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன் தலங்கம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அருப்பிட்டிய சந்திக்கு அருகில் மோட்டார் சைக்கிள் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்கு உள்ளாகி உள்ளது.
விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவருர் பலத்த காயங்களுக்கு உள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அதில் மோட்டார் சைக்கிள் ஓட்டுனர் உயிரிழந்துள்ளார்.
மாலபே பகுதியை சேர்ந்த 39 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
புத்தளம் – திருகோணமலை வீதியில் மஹபுலன்குளம் பகுதியில் புத்தளம் திசையில் நோக்கி பயணித்த லொறி ஒன்று அதே திசையில் பயணித்த மற்றுமொரு லொறியை மோதியுள்ளது.
இதனையடுத்து குறித்த இரு லொறிகளும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மற்றுமொரு லொறியுடன் மோதியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

