யேர்மனி ஸ்ருட்காட் நகரில் இடம்பெற்ற ஏதிலிகள் தின நிகழ்வு. 20.6.2021

505 0

யேர்மனி ஸ்ருட்காட் நகரில் ஏதிலிகள் தினமான இன்று ஏதிலிகளுக்காக குரல் கொடுக்கும் மனித உரிமை அமைப்புக்களால் ஏதிலிகள் தினம் நினைவுகூரப்பட்டது.
இந் நிகழ்வில் பல மனித உரிமை அமைப்புக்களும் ஏதிலிகளுக்கு குரல் கொடுக்கும் அமைப்புக்களும் பங்குபற்றி ஏதிலிகளை நாடுகடத்தும் யேர்மனிய அரசின் செயலுக்கு பலத்த கண்டனங்களைத் தெரிவித்ததோடு உடனடியாக நாடுகடத்தும் விடயத்தை நிறுத்துமாறும் கோரிக்கைகள் முன்வைத்தனர்.

இந் நிகழ்வில் தமிழ் இளையோர்; அமைப்பினரும் யேர்மன் ஈழத்தமிழர் மக்களவையும் கலந்துகொண்டு தமது கண்டனத்தையும் யேர்மனிய அரசிடம் முன்வைத்தனர். யேர்மன் மொழியிலான பதாதைகளும் சிறிலங்கா அரசின் இனவழிப்பு புகைப்படங்களும் மக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டதுடன் யேர்மன் மொழியிலான உரையும் இடம்பெற்றது.

சிறிலங்கா அரசு ஓர் இனஅழிப்பு அரசு இந்த அரசிடமிருந்து தப்பி இங்கு வந்து ஏதிலிகளாக தஞ்சம் கோரியவர்களைத் திருப்பி அந்த இனவழிப்பு அரசிடம் கையளிக்க வேண்டாம் என்றும். சிறிலங்கா அரசு கடுமையான பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தினை இப்போதும் அமுலில் வைத்திருக்கின்றது. அரசுக்கு எதிராகக் குரல் கொடுக்கும் எவரையும் இச்சட்டத்தினைப் பயன்படுத்தி விசாரணையின்றி நீண்டகாலம் சிறையில் வைத்திருக்கலாம் என்று சென்ற மாதம் ஐரோப்பிய பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட விடயங்களை முன்மாதிரியாகக் கொண்டு யேர்மனி தனது நாடுகடத்தும் விடயத்தை நிறுத்தவேண்டும் என்றும் கோரிக்கைகள் வைக்கப்பட்டது.