2018 ஆம் இடம்பெற்ற உள்ளூராட்சி சபை தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சியின் ஊடாக வெற்றிபெற்று பின்னர் ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்துகொண்ட 59 பேரின் பதவிகளை இரத்து செய்வதற்கான வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது.
தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவரின் கையொப்பத்துடன் குறித்த வர்த்தமானி வௌியிடப்பட்டுள்ளது.
குறித்த 59 பேரில் வெலிகம, தங்கல்ல மற்றும் நாவலபிட்டிய ஆகிய உள்ளூராட்சி சபை தலைவர்கள் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது

