ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்ணான்டோ வீட்டுக்கு, பொலிஸ் குழுவொன்று இன்று(17) மதியம் சென்றுள்ளது.
பொலிஸ் அதிகாரிகள் வத்தளையில் உள்ள தனது வீட்டுக்கு வந்தாக தெரிவித்த ஹரின் பெர்ணான்டோ, வீட்டு வளாகத்தில் கூட்டமொன்று நடைபெறுகிறதா என்று பொலிஸார் தன்னிடம் விசாரித்ததாகவும் கூறினார்.
பிற்பகல் 1 – 1.30 மணியளவில் சிவில் மற்றும் சீருடை அணிந்த பொலிஸ் குழுவொன்றே அங்கு வந்திருந்தாக அவர் குறிப்பிட்டார்.
அத்துடன், சில பொலிஸ் வாகனங்கள் தனது வீட்டினை அண்மித்த வளாகத்தில் தரித்து நின்றதை தான் சி.சி.டி.வியில் கண்டதாக அவர் சுட்டிக்காட்டினார்.
உயர் அதிகாரியிடம் இருந்து வந்த அலைபேசி அழைப்பினை தொடர்ந்து குறித்த குழுவினர் அங்கிருந்து சென்றதாக ஹரின் பெர்ணான்டோ கூறினார்.

