சமுர்த்தி பெறுநர்களுக்கு மேலதிகமாக குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு 5000 ரூபா கொடுப்பனவு வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
அமைச்சரவை கூட்டத்தின் போது இதற்கான அனுமதி கிடைக்கப்பெற்றதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
சுகாதாரத் துறையில் உள்ள சிக்கல்கள் தொடர்பிலும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
அரிசி விலையை கட்டுப்படுத்துவது குறித்தும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டதாக அமைச்சர் எஸ்.எம் சந்திரசேன தெரிவித்துள்ளார்.

