பாண் தவிர்ந்த அனைத்து பேக்கரி பண்டங்களின் விலைகளில் அதிகரிப்பு

248 0
பாண் தவிர்ந்த அனைத்து பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.
எரிபொருள் விலை அதிகரிப்பு காரணமாக பேக்கரி உரிமையாளர்கள் விலையை அதிகரித்துள்ளதாக சங்கத்தின் தலைவர் என்.கே. ஜெயவர்தன தெரிவித்தார்.
இதன்படி மாலு பாண், பனிஸ் மற்றும் ஏனைய பேக்கரி பண்டங்கள் 5 ரூபா முதல் 10 ரூபா வரை அதிகரிக்கப்பட்டுள்ளன.
மேலும் மாவு வகைகளின் விலை தவிர பேக்கரி பண்டங்களுக்குப் பயன்படுத்தும் பொருட்களின் விலைகளும் உயர்த்தப்பட்டுள்ளதாக ஜெயவர்தன தெரிவித்தார்.