குரோசியாவில் உள்ள லெக்ராட்டில் உள்ள வீடுகள், சில நிபந்தனைகளுடன் 12 ரூபாய்க்கு விற்பனை செய்ய இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
குரோசியாவின் லெக்ராட் நகரில் இருந்து ஏராளமான மக்கள் வேறு இடத்திற்கு குடிபெயர்ந்து விட்டதால், ஆள் இல்லாமல் வீடுகள் காலியாக உள்ளன. மீண்டும் நகரத்திற்கு மக்களை கொண்டு வர, லெக்ராட் நகர நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதனால் ஒரு குனாவிற்கு (11 ரூபாய் 83 பைசா) வீடு வழங்க இருப்பதாக அறிவித்துள்ளது. ஆனால் சில நிபந்தனைகளையும் விதித்துள்ளது.
வட குரோசியாவில் அமைந்துள்ள லாக்ராட் நகரம் 62.62 சதுர கிலோ மீட்டர் பரப்பளவை கொண்டது. குரோசியாவின் 2-வது மிகப்பெரிய மக்கள் தொகை கொண்ட நகராக இருந்தது. 15-ம் நூற்றாண்டில் ஆஸ்ட்ரோ-ஹங்கேரியன் ஆட்சி நடைபெறும் வரை மக்கள் இருந்துள்ளனர். அப்போது முக்கிய நகராக விளங்கியுள்ளது.
ஆட்சி முறியடிக்கப்பட்ட பின் மக்கள் அருகில் உள்ள இடத்திற்கு பல்வேறு வசதிகளை நோக்கி இடம்பெயர்ந்துள்ளனர். இதனால் 19-ம் நூற்றாண்டில் மக்கள் தொகை மிகவும் குறைந்துள்ளது. தற்போது 2241 பேர் வசித்து வருகிறார்.


