சட்டவிரோத மதுபான உற்பத்தியில் ஈடுபட்ட போது ஏற்பட்ட வெடிப்புச் சம்பவத்தில் ஒருவர் பலி

315 0

சட்டவிரோத மதுபான உற்பத்தியில் ஈடுபட்ட போது ஏற்பட்ட வெடிப்புச் சம்பவமொன்றில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.

அம்பாறை சம்மாந்துறை பிரதேசத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இந்த வெடிப்புச் சம்பவத்தில் மேலும் ஒருவர் காயமடைந்துள்ளார் என குறிப்பிட்டுள்ளனர்.

மல்வத்தைப் பிரதேசத்தைச் சேர்ந்த 53 வயதான நபர் ஒருவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார். சட்டவிரோதமான முறையில் மதுபானம் உற்பத்தி செய்து கொண்டிருந்த போது பெரல் ஒன்று வெடித்துச் சிதறியதில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் உயிரிழந்தவரின் சடலம் சம்மாந்துறை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.