சிறுவர் உட்பட 10 பேருக்கு கொரோனா

30 0

அட்டாளைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி காரியாலப் பிரிவில் சிறுவர் உட்பட 10 பேர் கொரோனா தொற்றாளராக இனங் காணப்பட்டுள்ளதாக, அட்டாளைச்சேனைப் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எஸ்.அகிலன் இன்று (11) தெரிவித்தார்.   

அவர் மேலும்  தெரிவிக்கையில், அட்டாளைச்சேனைப் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தில் 10 பேர் கொரோனா தொற்றாளராக இனங் காணப்பட்டுள்ளனர் என்றும், இதுவரை எமது பிரிவில் 160 பேர் கொரோனா தொற்றாளராக அடையாளப்படுத்தப்பட்டு தற்போது, 21 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவித்த அவர், 4 பேர் மரணித்துள்ளதுடன், 37 குடும்பங்கள் சுயதனிமைப்படுத்தலில் வீடுகளில் உள்ளனர் என்றும் குறிப்பிட்டார்.