கிணற்றில் இருந்து சிறுவனின் சடலம் மீட்பு

54 0

மட்டக்களப்பு, வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள பிறைந்துனைச்சேனை பிரதேசத்தில் கிணற்றில் இருந்து 4 வயது சிறுவன் ஒருவனை இன்று (10) சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பிறைந்துனைச்சேனையைச் சேர்ந்த முகமட் நபீர் முகமட் ஹாபீர் என்ற 4 வயது சிறுவனை இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த பிரதேசத்திலுள்ள வீட்டில் பெற்றோருடன் உறங்கிக் கொண்டிருந்த சிறுவன் சம்பவதினமான நேற்று இரவு 11 மணிக்கு பின்னர் காணாமல் போயுள்ளதாகவும் நீண்ட நேரம் தேடிப்பார்த்த நிலையில் கிணற்றில் உயிரிழந்த நிலையில் சிறுவன் இருந்துள்ளதாகவும் பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது

இச் சம்பவ இடத்திற்கு தடவியல் பிரிவு வரவழைக்கப்பட்டு இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.