நுவரெலியாவில் 113 பேருக்கு கொவிட்!

35 0

நுவரெலியா மாவட்டத்தில கடந்த 24 மணி நேரத்தில் 113 பேர் கொவிட்-19 தொற்றால் பீடிக்கப்பட்டுள்ளனர்.

இதன்படி, அந்த மாவட்டத்தில் தொற்று உறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 5,342 ஆக உயர்வடைந்துள்ளது.

அந்த மாவட்டத்தில் இதுவரை 78 கொவிட்-19 மரணங்களும் பதிவாகியுள்ளன.

அத்துடன், நுவரெலியா மாவட்டத்தில் 3,915 குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.