முல்லைத்தீவில் தொழில்வாய்ப்பின்மை

505 0

mullaithivu-8முல்லைத்தீவு மாவட்டத்தில் 21 ஆயிரத்து 702 பேர் தொழில்வாய்ப்பற்று இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு மாவட்டச் செயலக புள்ளிவிபரத் தகவல்கள் இதனைத் தெரிவிக்கின்றன.

2014 ஆம் ஆண்டு முல்லைத்திவு மாவட்டச்செயலகத்தினால் மேற்கொள்ளப்பட்ட புள்ளிவிபரக் கணிப்பீட்டில் இந்த தகவல் தெரியவந்துள்ளது.

இவ்வாறு தொழில்வாய்ப்பின்றி இருப்போரில் 6 ஆயிரத்து 753 பேர் க.பொ.த.சாதாரன தரம் வரையிலும், 3 ஆயிரத்து 180 பேர் க.பொ.த. உயர்தரம் வரையிலும் கல்வி கற்றவர்கள்.

199 பேர் பட்டதாரிகள் என்றும் தெரிவிக்கப்படுகிறது.