இந்தியா, நியூசிலாந்து இடையிலான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி இங்கிலாந்தின் சவுத்தம்டன் நகரில் நடைபெறுகிறது.
உலக டெஸ்ட்-சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் வெற்றி வாய்ப்பு யாருக்கு என்பது குறித்து ஆஸ்திரேலிய முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் பிரெட்-லீ அளித்த பேட்டியில் கூறியதாவது:
இந்தப் போட்டியில் இந்தியா, நியூசிலாந்து என இரு அணிகளும் சரிசம வாய்ப்பில் உள்ளன. என்றாலும் இங்கிலாந்து ஆடுகளத்தன்மை மற்றும் சீதோஷ்ண நிலை (வேகப்பந்து வீச்சுக்கு உகந்தது) ஏறக்குறைய நியூசிலாந்தில் உள்ளது போன்றே இருக்கும். அதாவது பந்து நன்கு வேகத்துடன் ஸ்விங்கும் ஆகும். இவை எல்லாம் நியூசிலாந்துக்கு பழக்கப்பட்டது என்பதால் அவர்களால் எந்தவித தடுமாற்றமும் இன்றி பந்து வீச முடியும். இதன் அடிப்படையில் பார்த்தால் நியூசிலாந்துக்கே சாதகமாக இருக்கும் என்று கருதுகிறேன்.

