வட்டுக்கோட்டையில் நகைகளை களவாடிய இளைஞரொருவர் கைது

298 0

வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வட்டு கிழக்குப் பகுதியில் பாட்டியின் நகையைத் திருடிய பேரன் வட்டுக்கோட்டை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இன்று இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,

கைது செய்யப்பட்ட இளைஞன் போதைவஸ்திற்கு அடிமையாகியுள்ளார்.இதனால் குறித்த இளைஞனின் தொல்லை தாங்க முடியாத பாட்டி தனது நகையைக் கடந்த 5ம் மாதம் 12ம் திகதி மறைத்து வைத்துள்ளார்.

இந்த நிலையில் கடந்த மாதம் 28ம் திகதி மறைத்து வைத்த நகையைப் பாட்டி பார்த்தபோது வைத்த இடத்தில் நகையைக் காணவில்லை.இதனைத் தொடர்ந்து வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் பாட்டி முறைப்பாடு செய்துள்ளார்.

பொலிஸார் குறித்த பாட்டியின் பேரனான 21 வயது இளைஞனைச் சந்தேகத்தின் பேரில் கைது செய்து விசாரணைகளை மேற்கொண்ட போது, தான் நகையினைத் திருடி 80ஆயிரம் ரூபாவிற்கு அடகு வைத்ததனை அவர் ஒப்புக்கொண்டுள்ளார்.