‘ஸ்புட்னிக் வீ ஒரு டோஸ் வைத்திய நிபுணர்களின் முடிவு’

213 0

ரஷ்யாவிலிருந்து கொள்வனவு செய்யப்பட்ட ஸ்புட்னிக் வீ தடுப்பூசியை மக்களுக்கு செலுத்துவதற்கான தீர்மானம், விசேட வைத்திய நிபுணர்களைக் கொண்ட விசேட குழுவால் எடுக்கப்பட்டது எனத் தெரிவித்த அமைச்சரும் அமைச்சரவைப் பேச்சாளருமான கெஹெலிய ரம்புக்வெல, அக் குழுவின் ஆலோசனைக்கமையவே ஸ்புட்னிக் வீ ஒரு டோஸை மாத்திரம் செலுத்தப்படுகின்றது.

வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு, அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நேற்று (01) இடம்பெற்றது. இதில் பங்கேற்றிருந்த ஊடகவியலாளர், ஸ்புட்னிக் வீ தடுப்பூசி முதலாவது டோஸ் மாத்திரமே செலுத்தப்படும் என குறிப்பிடப்பட்ட ஆவணத்தில் கண்டியில் மக்களிடம் கையொப்பம் வாங்கப்பட்டுள்ளமை தொடர்பில்
வினவிய போதே ​அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

“சுகாதார அமைச்சின் பிரதி பணிப்பாளர் வைத்தியர் எஸ்.எம்.ஆனல்டின் தலைமையில், உலக சுகாதார அமைப்பின் தேசிய நிகழ்ச்சித்திட்ட அதிகாரி வைத்தியர் நாலிகா குணவர்தன, தொற்று நோய் பிரிவின் விசேட வைத்திய நிபுணர் ஹசித திசேர உள்ளிட்ட பலரைக் கொண்ட குழுவே இந்த விடயத்தை தீர்மானித்தது” என்றார்.

எனவே நாட்டில் கொரோனாவைக் கட்டுபடுத்த விசேட வைத்திய நிபுணர்களின் ஆலோசனைக்கமைய செயற்படும் தேவையுள்ளது. சாதாரண சத்திர சிகிச்சையின் போது கூட இவ்வாறானதோர் ஆவணத்தில் கையெழுத்து வாங்கப்படும் என்றார்.

“குறித்த தடுப்பூசி செலுத்தலின் போது பெற்றுக்கொள்ளப்பட்ட கையொப்பம்
பலவந்தமாக வாங்கப்பட்டுள்ளதாக சிலர் வெளிகாட்ட முயற்சிக்கிறனர்”
என்றார்.