ஸ்பூட்னிக் வி தடுப்பூசியின் ஒரு டோஸ் போதுமானது – கெஹெலிய

259 0

அனைத்து இலங்கையர்களுக்கு ரஷ்யாவின் ஸ்பூட்னிக் வி தடுப்பூசியின் முதல் டோஸை செலுத்துமாறு நிபுணர்கள் குழு பரிந்துரை செய்துள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

இன்று (செவ்வாய்க்கிழமை) கொழும்பில் நடைபெற்ற வாராந்திர அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அமைச்சரவை பேச்சாளர் கெஹெலிய ரம்புக்வெல்ல இதனை தெரிவித்தார்.

சுகாதார சேவைகள் பிரதி பணிப்பாளர் ஜெனரல் வைத்தியர் எஸ்.எம். அர்னால்ட் தலைமையிலான நிபுணர் குழுவால் இந்த பரிந்துரை வழங்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

இதற்கிடையில், கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த தற்போதைய அரசாங்கம் மேற்கொள்ளும் திட்டங்களுக்கு இடையூறு விளைவிக்க வேண்டாம் என எதிர்கட்சியிடம் கெஹெலிய ரம்புக்வெல்ல கேட்டுக்கொண்டார்.

குறிப்பாக தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ள 190 க்கும் மேற்பட்ட நாடுகளுடன் இலங்கை போட்டியிட வேண்டும், எனவே கிடைக்கும் மற்றும் பிற காரணிகளின் அடிப்படையில் முடிவுகளை எடுக்க அரசாங்கம் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது என அவர் மேலும் கூறினார்.

கொரோனா தொற்று தொடர்பான அனைத்து முடிவுகளும் சுகாதார நிபுணர்களின் ஆலோசனையின் அடிப்படையில் எடுக்கப்படுகின்றன என்றும் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல குறிப்பிட்டார்.