யாழில் கொரோனா தடுப்பூசி வழங்கும் செயற்றிட்டம் 3 ஆவது நாளாக முன்னெடுப்பு

74 0

பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி வழங்கும் செயற்றிட்டம், யாழ்ப்பாணத்தில் 3 ஆவது நாளாக இன்று (செவ்வாய்க்கிழமை) முன்னெடுக்கப்பட்டுள்ளது.

யாழ்.பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட நாவலர் கலாசார மண்டப கொரோனா தடுப்பூசி வழங்கும் நிலையத்திற்கு மக்கள் ஆர்வமாக வருகை தந்து, தமக்குரிய தடுப்பூசியை பெற்றுச் செல்வதனை அவதானிக்க கூடியதாக உள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

இதில் மாற்றுத்திறனாளிகள், வயது முதிர்ந்தவர்கள் மற்றும் இளைஞர்கள் உள்ளிட்டோர் அதிகாலையிலேயே வருகை தந்து, தமக்குரிய தடுப்பூசியினை பெற்றுச் செல்வதை காணக்கூடியதாக இருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.